ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை நீக்கும் எண்ணம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கடவுள்கள் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் சேர்க்கப்பட மாட்டாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அன்ரோ அந்தோணி எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இது தொடர்பாக அமைச்சகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் நிதி அமைச்சகத்திடம் அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை எனவும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கரன்சியை மாற்றும் எண்ணம் இல்லை என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.