Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு கிழிஞ்சிருச்சா…? கவலைய விடுங்க…. இதை செய்தால் உடனே பணம் கிடைக்கும்..!!!!

பொதுவாக ATM மிஷின்களில் கள்ள நோட்டு, கிழிந்த நோட்டு, மிகவும் கசங்கிய நோட்டு போன்றவை இருக்காது. சரியான நோட்டுகள் தான் வரும். ஆனால் சில நேரங்களில் ரூபாய் நோட்டுகள் மிஷின்களுக்குள்ளேயே சிக்கி கிழிந்து விட வாய்ப்புள்ளது. அப்படி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பொழுது உங்களுக்கு கிழிந்த நோட்டு கிடைத்தால் கவலை வேண்டாம். அந்த ரூபாய் நோட்டிற்கு பதிலாக உங்களுக்கு அதே மதிப்பிலான புதிய நோட்டுக்கள் வழங்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் சார்ந்த வங்கிகளுக்கு சென்று புதிய நோட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அங்கு சென்று பணம் எடுத்த தேதி, நேரம், ஏடிஎம் கிளை விவரம் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து அதனுடன் நீங்கள் பணம் எடுத்த ரசீதையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். ஒருவேளை ரசீது வராவிட்டால் பணம் எடுத்தவுடன் செல்போன் நம்பருக்கு வரும் எஸ்எம்எஸ்  விவரத்தையும் வழங்க வேண்டும். இதையடுத்து உங்களுடைய விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வங்கி தரப்பில் இருந்து உங்களுக்கு வரவேண்டிய தொகை வழங்கப்பட வேண்டும்.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் தெரிவித்துள்ளது. எனவே எந்தவொரு வங்கியும் ஏடிஎம்களில் இருந்து எடுத்த கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர மறுக்க முடியாது. இதையும் மீறி வங்கிகள் மாற்றித் தர மறுத்தால், வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்  வாடிக்கையாளரின் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கி ரூ.10,000 வரை நஷ்டஈடு செலுத்த வேண்டியிருக்கும்.

Categories

Tech |