புதுச்சேரி மாநிலத்தில் மருந்தகம் ஒன்றில் திருடன் ஒருவன் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி மாநிலம் கலைவாணர் நகரில் உள்ள ஒரு மருந்தகத்தில் நள்ளிரவு வேளையில் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடியது மட்டுமல்லாமல் கடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை பையில் போட்டு திருடி சென்ற சம்பவம் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கொள்ளையனை தேடிவருகின்றனர்.
Categories