Categories
மாநில செய்திகள்

ரூபாய் 10 கோடி…. சினேகனை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!

தான் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதை தடுப்பதற்காக தன்னை விலை  பேசினார்கள் என்று சினேகன் கூறி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினை சேர்ந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். இன்று மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார் இதற்கான வேட்புமனு தாக்கலை இன்று செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் தடுப்பதற்காக 10 கோடிக்கு விலை பேசியதாகவும் அவர் தெரிவித்தார். இதனை நெட்டிசன்கள் சரமாரியாக கிண்டல் எடுத்து வருகின்றனர். “கவிஞர் பொய் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன், இப்பதான் பாக்குறேன், கவிதைக்கு பொய் அழகு கவிஞருக்குமா?” உள்ளிட்ட வாசகங்கள் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

Categories

Tech |