இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவிசாஸ்திரி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததும் அவரது பதவியில் இருந்து விடைபெறுகிறார். இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக ஆகலாம். அவருக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருந்ததால் மற்ற வீரர்கள் விண்ணப்பம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் முறைப்படி ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.