ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டு புதிய சிறுவர் பூங்காவை அமைச்சர் சி.வே கணேசன் தலைமை தாங்கி திறந்து வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மேலபட்டாம்பாகத்தில் பேரூராட்சியின் சார்பாக சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 14 லட்சம் ஆகும். மேலும் இதன் திறப்பு விழாவிற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் தலைமை தாங்கி பூங்காவை திறந்து வைத்துள்ளார்.
அதோடு எம்.எல்.ஏ வேல்முருகன் முன்னிலை வகித்துள்ளார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி வரவேற்புரை ஆற்றியுள்ளார் மேலும் இதில் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், மணிமேகலை, மோகனவள்ளி, மஞ்சுளா சுகுணா உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இறுதியில் பேரூராட்சியின் செயல் அலுவலரான சண்முகசுந்தரி நன்றியுரை ஆற்றியுள்ளார்.