Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

ரூபாய் 17,00,000 வழிப்பறி …7பேர் கொண்ட கும்பல் …போலீசிடம் சிக்கினர்…!!

17,19,000 ரூபாய் வழிப்பறியில் ஈடுபட்டு புகாரில் தலைமறைவாக இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எம்.பி.கே நகர் பகுதியில் வசிப்பவர் முகமது அபூபக்கர் சித்திக். இவர் தனது அலுவலகத்திலிருந்து 17,19,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்க வாகனத்தில் வந்து  கொண்டிருந்தார்.அவர் பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத நேரத்தில் பணத்தை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு தப்பியோடியது.

இதனைத்தொடர்ந்து அங்கு ஜூஸ் கடை நடத்தி வரும் தர்மதுரை என்பவர் பாதிப்பணத்தை கீழே கிடந்தது என்று கூறி காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டு,மீதமுள்ள பணத்தை தனது வீட்டில் மறைத்து  வைத்துள்ளார்,இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தர்மதுரையின் வீட்டில் ஒழித்துவைத்திருந்த 17,19,000ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீதமிருந்த  பணத்தை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எடுத்துகொண்டதாக தர்மதுரை வாக்குமூலம் கொடுத்துள்ளார்.இதன்பேரில் வழக்கறிஞர்கள் 3பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் அபூபக்கர் சித்திக்கிடமிருந்து பணத்தை பறித்து சென்ற குற்றவாளிகள் 7பேரை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |