2014இல் பெட்ரோல் விலையை 50ரூபாய்க்கு இணையாக குறைப்போம் என்பது பாஜகவின் வாக்குறுதியாக இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
இப்பவும் பாஜக வாக்குறுதி அது தான். நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை பெட்ரோல் 50 ரூபாய், 60 ரூபாய் வரவேண்டும் என்றால் அது ஜிஎஸ்டிக்குள் போகவேண்டும், அது மட்டும் தான் ஒரே ஒரு வழி. இதை பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக நம்முடைய முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் அதிகாரபூர்வமாக ஜிஎஸ்டிக்கு சொல்லியிருக்கிறார், ஜிஎஸ்டி கொண்டு வர தயார்.
இதில் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் 2017 கொண்டுவந்த ஜிஎஸ்டி சட்டப்படி அப்ப பெட்ரோலியம் பொருள்களுக்கு விலக்கு கொடுத்திருக்கிறோம் அது 2022ல் ஜூன் 30-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது, ஜூலை 1ம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி இல்லாமல் நாடு போகப்போகிறது. அதனால் தான் இந்த அடுத்து ஒரு வருட காலம் நாம் பேசுகின்ற பேச்சு வார்த்தை ரொம்ப முக்கியம், அதை மாநில அரசு பெட்ரோலை ஜிஎஸ்டி கொண்டு வருவதற்கு தயாராக ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
இது பாரதிய ஜனதா கட்சி எப்போது சொல்லிவிட்டது மத்திய அரசு சார்பாக, இதை செய்தால் மட்டும் தான் பெட்ரோல் 50 ரூபாய் 60 ரூபாய்க்கு வரும். நாம் இன்று நடக்கக்கூடிய போராட்டம் தேர்தல் அறிக்கையிலே 5 ரூபாய் 4 ரூபாய் என்று சொல்லி நீங்கள் குறைக்காமல் இருக்கின்றீர்கள் குறைந்தபட்சம் அதையாவது குறைக்க வேண்டும் ஓட்டு போட்ட மக்களுக்கு ஒரு மரியாதை ஜனநாயகத்தில் உண்மை பேசுவது, அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது என தெரிவித்தார்.