Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 520 வருது…! ஆனால் ரூ.350 போதும்…. கூடுதலாக ரூ.230 எங்கே ? வசமாக சிக்கும் திமுக …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி,  உண்மையான லஞ்ச ஒழிப்பு துறையாக சோதனை நடத்தினால் அவர்கள் தெளிவாக செயல்படுவார்கள். ஆனால் ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தின் பெயரில் அந்த துறையின் உடைய அதிகாரிகள் அவர்களுடன் வருகிறார்கள். அவர்களே தன்னிச்சையாக ஒரு கணக்கெடுத்து கொண்டு வந்து ஊடகங்களிலே கூறிவிடுகிறார்கள். ஆனால் அங்கே சோதனை நடத்தும் பொழுது எந்த வித ஆதாரமும் கிடைப்பதில்லை, அது தான் உண்மை.

எட்டு மாத கால ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை, சேவைகளை எதையுமே செய்யவில்லை. அவர் செய்த ஒரே பணி பொங்கல் திருநாளில் பொங்கல் பரிசு விவசாய பெருமக்களுக்கு  கொடுத்தது. அப்படி கொடுக்கப்பட்ட அந்த பரிசு பொருளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது .இது போன்ற ஊழல்களை எல்லாம் மறைப்பதற்காக தான் இதுபோன்று   எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து, மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு செய்கிறார்கள். அதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கின்றேன்.

பொங்கல் பரிசு 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதிலே 20 பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்பிற்கு மட்டும் 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 1159 கோடி ரூபாய். நான் பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்வது என்னவென்றால், அவர்கள் கொடுத்த பொருட்கள் மொத்த விலையில் கூட வாங்கத் தேவையில்லை.

சில்லறை விலையில் கடையில் வாங்கி அந்த பொருளை அடுக்கினாலே ஒட்டுமொத்தமாக  அந்த 21 பொருளின் உடைய விலை 350 ரூபாய்க்குள் அடக்கமாகி விடுகிறது. 1159கோடி ரூபாய்  என்று வருகின்ற போது 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு பிரிக்கின்ற பொழுது 520 ரூபாய் ஒரு குடும்பத்திற்கு வருகின்றது. 350 ரூபாய் போக மீதி கிட்டத்தட்ட 230ரூபாய் ஒரு அட்டைதாரர்களுக்கு கூடுதலாக அரசு நிதியிலிருந்து 230 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் தெளிவாகக் கூறுகிறேன் இது மொத்த விற்பனையில் வாங்கக்கூடிய விலை அல்ல. சில்லறை விலையில்  வாங்குகின்ற பொழுதே இவ்வளவு தான் வருகிறது என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |