நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி பேரூராட்சிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக புன்னை புதிய காலனி அருகே இருக்கும் குட்டையை தூர்வாரும் பணி- ரூபாய் 21,70,000 மின்வாரிய அலுவலகம் எதிரே இருக்கும் குட்டை தூர்வாரும் பணி- ரூபாய் 25,25,000 பொன்னியம்மன் குளம் தூர்வாரும் பணி-27,80,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளுக்காக 1,792 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின்போது நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகா தேவி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜிஜாபாய், ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.