Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூபாய் 8,500ஆ…. என்ன கொடுமை இது ? அரசின் ”பில்” பார்த்து மிரண்ட முக.ஸ்டாலின் …!!

நேற்று சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய முக.ஸ்டாலின்,  கொரோனா காலத்து கொள்ளைகளால் சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது என்கிற அளவுக்கு ஊழல் தலைவிரித்து ஆடியது. நோய் கட்டுப்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை…. நோய் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தல…. போலி பில்களைக் போட்டு பணத்தை எடுத்துக் கொண்டார்கள்.

மஸ்க், பிளீச்சிங் பவுடர் இதையெல்லாம் அநியாய விலைக்கு வாங்கி கொள்ளை அடிச்சிருக்காங்க. மாநகராட்சி துப்புரவு பணியாளர்க்கு உணவு கொடுத்தோம் என சொல்லி பொய் கணக்கு எழுதி பல கோடி சொல்லி சுருட்டி  இருக்கிறார்கள். கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்கு முன்னால தகரம் அடிச்சாங்க. அந்த தகரத்திலோ துட்டு அடித்த ஆட்சி தான் இப்போது நடந்து கொண்டு இருக்ககூடிய ஆச்சி.

ஒரு வீட்டுக்கு முன்னால அஞ்சு தகரம் அடிக்கிறாங்க. ஒரு தகரத்திற்கு வாடகை 8,500ரூபாய் போட்டுருக்காங்க. என்ன கொடுமை இது ? ஆட்டோவில் மைக் வச்சு பிரச்சாரம் பண்ணாங்களே அதுல ஊழல் பண்ணிருக்காங்க. இதெல்லாம் வர போகுது. ஒன்னு விட மாட்டோம்.  ஸ்டாலின் எதையும் விட மாட்டான் பார்த்துக்கிட்டே இருக்க போறீங்க.

சிறு வியாபாரிகளுக்கு மாதந்தோறும் பணம் கொடுத்ததாக சொல்லி அதுல கணக்கு காட்டிக் கொள்ள அடிச்சிருக்காங்க. இப்படி கொரோனா  காலத்து அறுவடை சென்னை மாநகராட்சியில் அதிகமா நடந்து இருக்கு. இந்த மோசடிகளுக்கு…. இந்த பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆகணும் என தமிழக அரசை முக.ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |