Categories
மாநில செய்திகள்

ரூபாய் 9 கோடி கையாடல்….. “சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது”…. போலீசார் அதிரடி..!!

ரூபாய் 9 கோடியை கையாடல் செய்த சுற்றுலா வளர்ச்சி கழக உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பணத்தை கையாடல் செய்தது தொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் உதவி மேலாளர் ஹரிஹரன் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் பொருளாதார மோசடி தடுப்பு பிரிவு போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.. இந்த அலுவலகத்தில் மேனேஜராக சாக்கோ என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு சைமன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவரது கையெழுத்தை போலியாக போட்டு அந்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக வங்கி கணக்கில் இருந்து 9 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தி உதவி மேலாளர்கள் ஹரிஹரன், அதேபோல ஆனந்தன் ஆகியோரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி பணியிடை நீக்கம் செய்திருந்தார்.

இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொருளாதார மோசடி பிரிவிலும் புகார் செய்திருந்தார். அதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி மேலாளர் ஹரிஹரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த மோசடியில் வேறு யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள்? யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணையானது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |