Categories
சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் வெளியான “தி கிரே மேன்”…. தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து….!!!!

ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். ரசிகர்கள் கூறியுள்ளதாவது, தனுசுக்காக மட்டுமே படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். படம் அருமையாக இருக்கின்றது. தனுஷின் அறிமுகம் மாஸாக இருக்கின்றது. வழக்கம் போல் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். தனுஷ் நன்றாக நடித்து இருக்கின்றார். ஆனால், அவருக்கு குறைவான காட்சிகள் தான் இருக்கின்றது. சில நிமிடங்களில் வந்து செல்கின்றார். ஆனால் படம் பார்ப்பவர்களை தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார். மேலும்  ரூஸோ பிரதர்ஸ் சொன்னபடி அடுத்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

Categories

Tech |