முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வேறு எந்த இடத்திற்கும் செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். இவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்துள்ளது.
இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜி தமிழகத்திற்குள் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் தமிழகத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என உத்தரவிட்டனர்.