வெளிநாடுகளில் 1ரூபாய் கூட கடன் வாங்காமல் நாட்டை பிரதமர் மோடி ஆண்டு வருவதாக புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் புகழாரம் சூட்டினார்.
பிரதமர் மோடி இன்று புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதில் பேசிய புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், சென்ற ஆண்டு 2018இல் இதே பிப்ரவரி 25இல் மேடையில் பாரத பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அன்னைக்கு சொன்னார் அவர், பஞ்சாபிலும் காங்கிரஸ் – புதுச்சேரியிலும் காங்கிரஸ் என்று சொன்னார். இன்றைய தினம் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை பாரதப்பிரதமர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லாத புதுச்சேரியை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று ஒரு சபதம் ஏற்றோம். 2021இல் உங்களிடம் புதுச்சேரி மாநிலத்தை மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி அது பாரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தொண்டர்கள் சார்பாக உறுதியளிக்கிறோம்.
இன்னைக்கு வரலாற்று சிறப்புமிக்க நேரம். புதுச்சேரி வரலாற்றிலேயே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டம் கூடிய முதல் கூட்டம் பாரத பிரதமரின் கூட்டம். ஒரு காலத்தில் உலக அரங்கில் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் மன்மோகன்சிங், ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி உள்ளிட்ட அனைத்து பிரதமர்களும் வெளிநாட்டிற்கு கடன் வாங்க செல்வார்கள்.
உலகத்திலேயே ஒரு ரூபாய் கூட கடன் வாங்காமல் ஆறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சரித்திர நாயகன் நரேந்திர மோடி அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி என பேசினார்.