Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ரூ.1 கோடி கொடுத்தால் தான் விடுவிப்போம்” பெற்றோர் அளித்த புகார்…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

ரூ.1 கோடி கேட்டு பிளஸ்-2 மாணவனை கடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நகர் பகுதியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் மாணவனின் வீட்டிற்கு அவருடைய உறவினர் ஒருவர் வந்துள்ளார். அவர் பெற்றோரிடம் மாணவனை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து தர்மபுரி நகரில் உள்ள ஒரு தியேட்டரில் 2 பேரும் படம் பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது பென்னாகரம் சாலையில் கார் ஒன்றில் காத்திருந்த மர்மநபர்கள் அவர்களை வழிமறித்து மாணவரையும் உறவினரையும் காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனையடுத்து சினிமாவுக்குச் சென்று நீண்ட நேரம் ஆனதால் பெற்றோர் அவர்களைத் தேடினர். அப்போது மாணவரின் தந்தைக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.

அதில் மர்ம நபர் ஒருவர் மாணவரையும் அவருடைய உறவினரையும் கடத்திச் சென்றதாகவும் ஒரு கோடி கொடுத்தால் தான் அவரை விடுவிப்போம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் தர்மபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மற்ற மாவட்டங்களில் உள்ள சோதனைச் சாவடிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தங்களை மோப்பம் பிடிப்பதாக அறிந்து கொண்ட மர்மநபர்கள் மாணவனை ஓசூர் சிகாட் அருகில் காரிலிருந்து இறக்கி விட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். இதனையடுத்து ஓசூர் சிப்காட் காவல் துறையினர் மாணவனை மீட்டு தர்மபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து தர்மபுரி காவல்துறையினர் மாணவனை கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |