Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரூ.1 கோடி செலவில் புதிய பாலம்…. கோலாகலமாக நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவில் அருகில் ரூ.1கோடி 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபு, திமுக நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, முகையூர் ஒன்றிய குழு தலைவர் தனலட்சுமி உமேஷ்வரன் துணைத்தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளரும் தொழிலதிபருமான அக்பர் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய பாலத்தை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய பாலத்தை திறந்து வைத்து பேசினார். இதில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், புகழேந்தி எம்.எல்.ஏ., திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் வக்கீல் தங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அய்யப்பன், துணை செயலாளர்கள் வெங்கடேசன், அவைத்தலைவர் சக்திசிவன், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், பிரபு, பிரகாஷ், ஒன்றிய பொருளாளர் ராஜசேகர், பேரூராட்சி துணைத் தலைவர் கஜிதாபிவி, வார்டு கவுன்சிலர்கள் குமார், அகமதுஷரீப், மோகன், சரவணன், ரமேஷ், தனுசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாவின் முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

Categories

Tech |