நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பாத்திமா ரமீசா(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குலசேகரபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் பிரபா. இவர் ஈத்தாமொழி பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். எனது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு பிரபா அறிமுகமானார். அப்போது பிரபா என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக ரூ.1கோடி 25 ஆயிரம் தரவேண்டும் என்று கூறினார்.
நானும் அவரது பேச்சை நம்பி பல தவணையாக ரூ.1 கோடி 25 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு அவர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதன் பிறகு தான் அவர் வேலை வாங்கி தருவதாக என்னிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே பிரபா மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து பிரபாவை தீவிரமாக தேடி வந்தனர். அப்போதும் நேற்று முன் தினம் காட்டு விளையில் பிரபாவை போலீசார் கைது செய்தனர்.