பிரபல நாட்டில் கொரோனா தடுப்பூசிகளை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளனர்.
கனடா நாட்டில் அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கொரோனா தடுப்பூசிகள் வாங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 1.36 கோடி ரூபாய் ஆகும். இந்த தடுப்பூசிகள் வெவ்வேறு தடுப்பூசிகளின் பயன்பாட்டின் காரணமாக கனடா நாட்டில் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.
அதன் பிறகு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் போடப்பட்டது. இதன் காரணமாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்திடம் இருந்து வாங்கிய தடுப்பூசிகள் காலாவதி ஆகிவிட்டது. இதன் காரணமாக தடுப்பூசிகளை குப்பை தொட்டியில் போட்டு விட்டனர்.