திண்டுக்கல்லில் மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் உப்புக்கறி கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது.
இந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள திண்டுக்கல் உப்புக்கறி கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12.30 மணி முதல் 1.30 வரை மட்டுமே இந்த ஆஃபர் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.