Categories
மாநில செய்திகள்

ரூ.1.62 கோடி மோசடி வழக்கு…. செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2011-2015 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. 81 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்துள்ளார். அதனை சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, அன்னராஜ் பிரபு மற்றும் சகாயம் போன்றவர்கள் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதி என்.ஆலிசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உட்பட இருவரையும் அக்டோபர் 5ஆம் தேதி வாக்குமூலத்தின் நகலை  பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |