இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் முழு ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகளும் பல சலுகைகளை அறிவித்து வருகிறது.
ஒருசில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
மேலும் சுதந்திர இயக்கம் முதல் தற்போது வரை இந்திய பத்திரிக்கைகள் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது எனவும், அனைத்து பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி எனவும் ட்விட் செய்துள்ளார்.