புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் மானிய கோரிக்கையின் போது தமிழக புத்தொழில் ஆதாரத்திட்டத்தின் கீழ் 100 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 60 நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் வரலாம். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தெரிவித்து தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை சென்று பார்வையிடலாம் என்று தெரிவித்துள்ளது.