Categories
மாநில செய்திகள்

ரூ. 100 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள்…. அரசாணை வெளியிட தமிழக அரசு…!!!!

ரூ. 100 கோடி மதிப்பில் ஆதிதிராவிட நலத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் ஆய்வக கட்டிடங்களை கட்டுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது: “ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கடந்த செப்டம்பர் 8ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான புதிய வரவு, செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 1,138 பள்ளிகளில் பயிலும் 83,259 மாணவர்களின் கல்வி நலனை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 150 பள்ளிகளில் 100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வு கட்டடங்கள் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது 100 கோடி மதிப்பீட்டில், 29 மாவட்டங்களில் 150 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு 480 புதிய வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 15 ஆய்வு கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |