கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தங்கள் உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு குறித்து மிகவும் எச்சரிக்கையாகிவிட்டனர். மத்திய அரசும் சாதாரண மக்களுக்கு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வழங்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைத்து ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் இந்த திட்டம் 2013 ஜனவரி முதல் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் இணைபவர் கண்டிப்பாகக் குடும்பத் தலைவர் அல்லது வீட்டில் சம்பாதிக்கும் நபராக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்க வேண்டும். சொந்தமாக வீடு, நிலம் ஏதும் இல்லாதவராக இருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டுக் கழகம் வழங்கும் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தில் சேர்வதன் மூலம் விபத்துக் காரணமாக இறப்பு ஏற்பட்டால் அல்லது விபத்துக் காரணமாக நிரந்தரமாக உடல் பாகங்களில் செயலிழப்பு ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
எல்.ஐ.சியின் ஆம் ஆத்மி யோஜனா பாலிசியின் கீழ், காப்பீட்டாளர் மரணம் அடைந்துவிட்டால், அவரை சார்ந்து இருந்தவர்களுக்கு (குடும்பம்) ரூ .30,000 பாலிசி கவர் கிடைக்கிறது. இது தவிர, விபத்து காரணமாக உடலில் பாகங்கள் செயல்படாமல் போனாலும் அதற்கும் நன்மைகள் கிடைக்கும். எல்.ஐ.சி ஆம் ஆமி பிமா யோஜனாவின் கீழ், விபத்து காரணமாக நிரந்த இயலாமை ஏற்பட்டால், பாலிசிதாரருக்கு ரூ .37,500 கிடைக்கும். பாலிசியின் காலகட்டத்தில் தற்செயலான மரணம் ஏற்பட்டால், பரிந்துரைக்கப்பட்டவர் இந்த பாலிசியின் கீழ் ரூ .75,000 காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். இந்த திட்டத்தின் பிரீமியத்தை மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செலுத்துகின்றன.
எல்.ஐ.சியின் இந்த திட்டத்தின் கீழ், பாலிசிதாரருக்கு இன்னும் பல வசதிகள் கிடைக்கின்றன. பாலிசிதாரரின் குழந்தைகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் காலத்தில் உதவித்தொகை பெறுகிறார்கள். அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு இந்த உதவி கிடைக்கும். 18 முதல் 59 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபரும் எல்.ஐ.சி ஆம் ஆத்மி பீமா யோஜனாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்.ஐ.சி ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் பிரீமியம் ஆண்டுக்கு ரூ .200 ஆகும். இதில் 50 சதவீதம் அதாவது 100 ரூபாய் மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசாங்கத்தால் வழங்கப்படும். அதாவது பாலிசிதாரர் ஒரு வருடத்தில் ரூ .100 பிரீமியத்தை மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் தகவலுக்கு, எல்.ஐ.சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிடலாம்.