வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் 100 லட்சம் கோடி ரூபாயில் கதி சக்தி திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் 100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி திட்டம்’ அமல்படுத்தப்படும்.
மேலும் “பிரதம மந்திரி கதி சக்தி தேசிய திட்டம் மூலம் புதிய பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவாக்கப்படும். இந்தியாவை உலகின் பச்சை ஹைட்ரஜன் மையமாக உருவாக்க தேசிய ஹைட்ரஜன் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், மிகப் பெரிய ஹைட்ரஜன் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்கும். 75-வது சுதந்திரன விழாவை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 75 வந்தே பாரத் ரயில்கள் சேவையை விரிவுபடுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார்.