Categories
தேசிய செய்திகள்

ரூ.100, 200 நோட்டில் சாய்வான கோடுகள்…. எதற்காக இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!!!

இந்தியாவில் சென்ற 2017 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதனால் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அதனை வங்கியில் கொடுத்து அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெறலாம் என்று தெரிவித்தது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமே தலைகீழாக மாறியது. இந்த அறிவிப்பால் கருப்புபண பதுக்கலும் வெளியாகியது. இதற்கிடையில் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மணிக்கணக்கில் வங்கிகளில் வரிசையில் நின்றனர். இந்த நிலையில் புதியதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்தது. இந்த வகையான நோட்டுகளில் சாய்வான கோடுகள் இடம்பெற்றிருக்கும். நோட்டுகளில் அதன் மதிப்புக்கு  ஏற்றவாறு கோடுகளின் எண்ணிக்கை மாறுபடும். இக்கோடுகள் “பிளீட் மார்க்ஸ்” என அழைக்கப்படுகிறது. இது பார்வையற்றவர்களுக்கு உதவும் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பார்வையற்றோர்கள் இக்கோடுகளை தொட்டு பார்த்து அது எவ்வளவு ரூபாய் நோட்டு என்று தெரிந்துகொள்வார்கள்.

அந்த வகையில் 100 ரூபாய் நோட்டில் இரு புறமும் 4 கோடுகள் இருக்கும். இதில் 200 ரூபாய் நோட்டின் இருபுறமும் 4 முகடுகள் இருக்கும். அதேபோன்று மேற்பரப்பில் 2 பூஜ்ஜியங்களும் இடம்பெற்றிருக்கும். அதன்பின் 500 ரூபாய் நோட்டுகளில் 5 கோடுகளும், 2000 ரூபாய் நோட்டுகளில் இருபுறமும் 7-7 கோடுகளும் இருக்கும். இதை வைத்து ரூபாய் நோட்டின் மதிப்பை பார்வையற்றவர்கள் அறிந்துகொள்வார்கள்.

Categories

Tech |