தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மாணவிகளிடம் கல்லூரி அடையாள அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கிக் கணக்கு விவரங்களை தர வேண்டும். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in/ இணையதளத்தில் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.. இந்தநிலையில் இந்தத் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.