இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
சென்னை சென்னை விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கும்பலின் தலைவனையும், அவரது நண்பனையும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1000 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் போதை பவுடர் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஈரான், மாலத்தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள போதை கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அந்த கும்பலை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.