ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும் காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.