Categories
மாநில செய்திகள்

ரூ 1000 போதாது..! குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் வழங்க வேண்டும்…. வலியுறுத்தும் ஈபிஎஸ்.!!

மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்..

மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 30,000 இழப்பீடாக வழங்க வேண்டும்.

சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாக்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் குடும்பத்திற்கு 1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே இந்த மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மாவட்டம் முழுதும் இருக்கின்ற மக்களுக்கு 1,000 ரூபாய் போதாது, அதனை சுமார் 3,000 ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 10 நாட்களாக தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. இதனால் யாரும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட நிலையை உணர்ந்து இப்போது குடும்பத்திற்கு 1,000 ரூபாய் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதனை உயர்த்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும்  3000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |