அனைவருக்குமே தங்களது இறுதிக்காலத்தில் பணம் நெருக்கடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கான முயற்சியில் இப்போது ஈடுபட வேண்டும். அதாவது, நல்ல பென்ஷன் கிடைக்கும் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் இப்பவே முதலீடு செய்யலாம். ஒரு முதலீட்டாளராக நீங்கள் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் நீண்ட காலம் கார்பஸை உருவாக்குவது மிகவும் புத்திசாலித்தனமானது.
அதே நேரத்தில் உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியாகவும் இது கருதப்படுகிறது. நீங்கள் உங்கள் பென்சனுக்காக முதலில் செய்ய நினைத்தால் ஓய்வுக்கு பின் காலத்தில் உங்களின் மாதாந்திர தேவைகளை பூர்த்தி செய்ய ஓய்வூதியத்தில் உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். அதனை தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகரின் உதவியுடன் நல்ல ரிட்டையர்மெண்ட் பண்டில் முதலீடு செய்யலாம். சமீபத்தில் யூனியன் மூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ரிட்டையர்மென்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபண்ட் சந்தா செலுத்துகைகளுக்கான செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.அது செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று முடிவடையும். இந்த ஃபண்டிற்கான குறைந்த பட்சம் ரூ.1000 ஆகும். இந்த ஃபண்டிற்கு 3 முதல் 5 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது.