ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபண்ட் மேனேஜர்களுக்கு சந்தை மூலதனம் மற்றும் துறைசார் முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகின்றது.ஃபண்ட் மேனேஜர்கள் சந்தையில் அவருடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர்களை நீண்ட காலத்திற்குச் செல்வத்தை உருவாக்குவதற்கு இந்த ஃபண்டானது பொதுவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.
வெறும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் முதலீட்டு எல்லையுடன் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி மாதம் ரூ.1000 முதலீடு செய்தாலே 7 வருட முடிவில் சில நிறுவனங்களின் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் ரூ.2,00,000 லட்சம் வரை லாபம் ஈட்டுத் தருகின்றன.
2022 இல் முதலீடு செய்ய சிறந்த ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்:
1. பராக் பனிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Parag Parikh Flexi Cap Fund)
2. யுடிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (UTI Flexi Cap Fund)
3. பிஜிஐஎம் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்
4. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Aditya Birla Sun Life Flexi Cap Fund)
5. எஸ்பிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (SBI Flexi Cap Fund)
6. கனரா ரோபெகோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் (Carana Robeco Flexi Cap Fund)
எங்கள் பரிந்துரை பட்டியலில் உள்ள எஸ்பிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டானது (SBI Flexi Cap Fund) கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது காலாண்டில் டாப் 10 தரவரிசையில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு திட்டமான ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் கடந்த இரண்டு மாதங்களில் மூன்றாவது காலாண்டில் சிறந்த ஃபண்டாக இருக்கிறது.