Categories
அரசியல்

ரூ. 10,000 முதலீடு செய்யுங்க…. லட்சங்களில் வருமானம் கிடைக்கும்….  அருமையான திட்டம்….!!!

தபால் அலுவலக டெபாசிட் திட்டம் மூலம் லட்சங்களில் நம்மால் வருமானம் ஈட்ட முடியும். தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான ஒன்று. நல்ல வருமானம் தரக்கூடியது. தபால் அலுவலகத்தில் மாதம் குறிப்பிட்ட தொகையை நாம் முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை ஈட்ட முடியும். அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தபால் அலுவலகத்தில் ரெகரிங் டெபாசிட் திட்டம் உள்ளது, இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். தற்போது இந்த திட்டத்திற்கு 5.8% கிடைக்கின்றது. இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் முதலீடு செய்தால் நல்ல வருமானம் பெற முடியும்.

சிறுவர்களின் பெயரில் பெற்றோர்களும் இந்த கணக்கை திறக்க முடியும். அதிகபட்ச முதலீட்டுக்கு எந்த வரம்பும் கிடையாது. தபால் அலுவலகத்தில் இந்தத் திட்டத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்வதாக வைத்துக் கொண்டால், இந்த திட்டத்திற்கு 5.8% கிடைக்கும், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்கு6,96,967 ரூபாய் கிடைக்கும். அதாவது கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் நீங்கள் செய்த டெபாசிட் தொகை மற்றும் வட்டி வருமானம் என்று ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.

Categories

Tech |