Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,000 தாரேன்…. தலையை வெட்டுங்க…. கொல்லுங்க …. ஸ்ரீராம் சேனா அறிவிப்பு …!!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவியின் தலைக்கு 10 லட்சம் நிர்ணயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20ஆம் தேதி AIMIM கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவி மீது 124ஏ பிரிவின் கீழ்  தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சர்சையாக முழங்கிய மாணவி கைது செய்யப்பட்டுள்ளநிலையில் அமுல்யா லியோனாவை கொல்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் மாணவி அமுல்யா வெளியே வந்தால் கட்டாயம் கொன்று விடுவோம் என்று எச்சரித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் பேசியவர் சஞ்சீவ் மராடி என்பது இவர் ஸ்ரீராம் சேனா அமைப்பு என்று உறுதிர்த்தியாகியுள்ளது.

Categories

Tech |