பிரதமர் மோடி – அமெரிக்கா அதிபர் டிரம்ப் சந்திப்புக்காக 3 மணி நேரத்துக்காக ரூ 100 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வர இருக்கிறார். வருகின்ற பிப்ரவரி 24 , 25 இல் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்தார் ஒபாமா. அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோடேரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கிறார்.
இது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம். 63 ஏக்கர் பரப்பளவில் 700 கோடி செலவில் இந்த உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானம் 1.10 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போன் மைதானத்தை விட மிகப் பெரிய மைதானமாக இந்த மைதானம் பார்க்கப்படுகின்றது.
அகமதாபாத்தில் பிரதமர் மோடியை டிரம்ப் சந்திக்கிறார்கள். கடந்த முறை மோடி அமெரிக்கா சென்றிருந்த போது ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சி அங்குள்ள இந்தியர்களால் நடத்தப்பட்டது. அதே போல கெம்சோ டிரம்ப் என்ற நிகழ்ச்சி நடத்தப்படயுள்ளது.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வர இருக்கின்றது. அதற்க்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆதரவு டிரம்ப்க்கு இருக்க இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் மூன்று மணி நேரத்திற்கு ரூ 100 கோடி ரூபாய் செலவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.புதிய சாலை அமைப்பதற்கு மட்டும் ரூ80 கோடி ரூபாய் செலவும் , பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு 12 முதல் 15 கோடி ரூபாய்யும் , விருந்தினர்களை உபசரிக்க 7 முதல் 10 கோடி ரூபாய் செலவு செலவு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இது போக நகரை பூக்களால் அழகு படுத்த 6 கோடி ரூபாய்யும் , கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு 4 கோடி ரூபாய்யும் என மொத்தம் 100 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.