மதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இன்று காலை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த சோதனையில் இதுவரைக்கும் அவரது வீட்டில் இருந்து 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சொல்லியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கான வெளிநாட்டு முதலீட்டில் ஆர்.பி.ஐ அனுமதி உரிய முறையில் பெறப்படவில்லை எனவும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்றிருக்கிறது என்று வருமான வரித்துறை சொல்லி இருக்கிறது. இந்த 5 கிலோ தங்கத்தை எந்த நோக்கத்திற்காக கட்டிகளாக மாற்றி இருந்தார் என்ற ஒரு கேள்வியை கேட்ட போது அவர் அவருடைய வருவாயில் இருந்து சில குறிப்பிட்ட தொகையை தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார் என்ற தகவலை வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளது.