Categories
மாநில செய்திகள்

ரூ 100,00,00,000 வசூல்…. குரூப் 4, குரூப் 2ஏ இரண்டிலும் கல்லாகட்டிய சித்தாண்டி ..!!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட காவலர் சித்தாண்டி சிபிசிஐடி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகத் தேடப்பட்டுவந்தவர் காவலர் சித்தாண்டி. இவரை ராமேஸ்வரத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

இந்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த காவலரான சித்தாண்டி மீது கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றுதல் உள்பட நான்கு பிரிவுகளின்கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்குத் தொடர்பாக சித்தாண்டி தேடப்பட்டுவந்த நிலையில், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குரூப்-4 தேர்வு முறைகேட்டிலும் சித்தாண்டி, ஜெயக்குமார் ஆகியோர் கடந்த எட்டு ஆண்டுகளாக ஈடுபட்டதும் அவர்களின் மோசடிகள் மூலம் 100 கோடிகளுக்கும் மேல் தேர்வர்களிடம் வசூல் செய்துள்ளதாகவும் சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் தகவல் கிடைத்துள்ளது.

முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், காவல் துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Categories

Tech |