Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1000,00,00,000 வேணும்..! 2011 மாதிரி கொடுங்க…. அதிரடி காட்டும் செல்லூர் ராஜீ …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, அதிமுகவின் சார்பாக மதுரை மாநகராட்சியை கண்டித்து…. மாநகராட்சி நிர்வாக மெத்தனப் போக்கை கண்டித்தும், தமிழக அரசு மதுரை மாநகராட்சியினுடைய வளர்ச்சிப் பணிகளுக்காக இன்றைக்கு எந்தவிதமான உதவியும் செய்யாத சூழ்நிலையில், நாங்கள் ஆயிரம் கோடி கேட்டோம்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக, அவர்கள் கூட்டணிக் கட்சி சார்பாக ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தி இருக்கின்றார்கள்.500 கோடி கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

எனவே இன்றைக்கு மதுரை மக்களுடைய நிலையை அறிந்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம். மதுரை மாநகராட்சி என்று பெயர் அளவிற்கு தான் இருக்குதே ஒழிய ஒரு கிராமப்புற பகுதியை போல மதுரையில் இருக்கிற 100 வார்டு மக்களும் துயரத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கு, சாக்கடைகள் ஆறாக ஓடுகிறது, எங்கு பார்த்தாலும் தெருவிளக்கு  சரியாக எரிவதில்லை, பராமரிப்புப் பணியாளர்கள் இல்லை, துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது, மாநகராட்சி ஆணையரிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இந்த தமிழக அரசு இங்கு இருக்கின்ற 2 அமைச்சர்களும் அதை முடுக்கி விட்டு வருகின்ற பொங்கல் திருநாள்…  தை திருநாள் தமிழர் திருநாளுக்கு மதுரை மக்களுக்கு நல்ல ஒரு வெளிச்சத்தை உருவாக்க வேண்டும். மதுரைக்கு 1,000 கோடி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மதுரை மாவட்ட மாநகர் கழகம் சார்பாக நாங்கள் 1,000கோடி ரூபாயாக கேட்டிருக்கிறோம். நிச்சயமாக மாண்புமிகு முதல்வர் பரிசளித்து கொடுப்பார் என்று நினைக்கிறோம்.

ஏனெனில் கடந்த 2011ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 250 கோடியை முதற்கட்டமாக கொடுத்தார், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன்….. அதே போல நம்முடைய நிதி அமைச்சர் சொன்னது போல 2011 ல் இருந்த பணம் மதிப்பிற்கு இன்றைக்கு 1,000 கோடி ரூபாய் ஆகிவிடும், நிச்சயமாக ஆயிரம் கோடிக்கு மேலாக வரும், குறைந்தபட்சம் 1,000கோடி ரூபாய்யை மதுரை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக…

இதுபோன்ற கோரிக்கையை முன்வைத்து மாநகராட்சியை கண்டித்து மாநகர் மாவட்ட கழக சார்பாக களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடைய அனுமதியோடு ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு  செய்துள்ளோம்.எனவே மதுரை மக்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுதும் உழைக்கும். ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, எந்த நிலையில் இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க உறுதியாக பாடுபடுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

Categories

Tech |