ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ11.33 கோடி செலவில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆலங்குளம் – தென்காசி ரோட்டில் மலைக் கோவில் அடிவாரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாக்கியுள்ளார். மேலும் ஞானதிரவியம் எம்.பி., மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் அடிக்கல் நாட்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார்கள்.
இதனை அடுத்து நெல்லை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், கல்லூரிக் கல்வி இணை இயக்க உதவி இயக்குனர் மயிலம்மாள், செயற்பொறியாளர் சத்யவாகேஸ்வரன், கல்லூரி முதல்வர் கலைமகள், மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றிய குழுத்தலைவர் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவிரி சீனித்துரை, கழுநீர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், தி.மு.க ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் நகர செயலாளர் நெல்சன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், அ.தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் சுபாஷ்சந்திரபோஸ், ராதா, கணபதி ஆலங்குளம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நிக்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கல்லூரி ரூ 11.33 கோடி செலவில் மூன்று தளங்களுடன் 50,416 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட இருக்கின்றது. மேலும் முதல்வர் அறை, மாணவர் கூட்டுறவு பண்டகசாலை, வகுப்பறைகள் உடன் அலுவலக அறை, பதிவு வைப்பறை, உடல் நல மையம் நூலகம், ஆய்வகம், மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, கருத்தரங்கு கூடம் உள்ளிட்ட பல வசதிகளுடன் அமைக்கப்பட்ட இருக்கின்றது.