Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1,100,00,000 மதிப்பு இருக்கும்….! தமிழக தேர்தல் அதிகாரி முக்கிய தகவல் …!!

தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்திய பிரதா சாகு  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரிதிரு சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத் தேர்தலை கண்காணிக்க நான்கு சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளதாகவும், செலவினம் பார்வையாளர்கள் இரண்டு பேரும்,  பொதுப்பார்வையாளர் ஒருவரும், காவல்துறை சிறப்பு பார்வையாளர் ஒருவரும் வர விருப்ப தாகவும் கூறினார். வாக்குச்சாவடிகளில் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்என்றும், தேர்தல் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் திரு . சத்திய பிரதா சாகு தெரிவித்தார் .

வாக்குப் பதிவு இயந்திரங்கள் நூறு சதவீதம் தயார் நிலையில் இருப்பதாகவும், கொரோனா முன்னேற்பாடுகள் காரணமாக வாக்கு எண்ணிக்கை மையம் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தேர்தல் ஆணையம் மூலம் கொடுக்கப்படும் PPE கிட் மூலம் கடைசி ஒரு மணிநேரத்தில் வாக்களிக்கலாம் என்று சத்திய பிரதா சாகு குறிப்பிட்டார்.

Categories

Tech |