ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தை சேர்ந்த சீபனா ராமா ராவ் என்பவர் துணிக்கடை ஒன்றில், 600 ரூபாய் மதிப்புள்ள துணியை வாங்கியுள்ளார். மேலும் அதற்கான கட்டணச் சீட்டில் கேரி பேக்கிற்கு 12 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதை சட்டவிரோதமானது என சீபனா கூறியுள்ளார்.
உடனே அதற்கு அந்த துணிக்கடை மேலாளர் கோபமாக பேசியுள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூபாய் 21,000 நஷ்ட ஈடையும், மேலும் 1500 ரூபாய் வழக்குச் செலவுத் தொகையையும், வாடிக்கையாளருக்கு துணிக்கடை தரப்பிலிருந்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.