Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.12 கோடி…. “ஷ்ரேயஸ் ஐயரை தட்டி தூக்கிய அணி”…. “ஒருவேளை இவர்தா புது கேப்டனோ”…. அப்ப வேற லெவல்ல இருக்கும்…!!

ஐபிஎல் 15-வது  சீசனுக்கான மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா அணி தட்டித்  தூக்கியது.

பெங்களூரில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான  மெகா ஏலம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஏலத்தின் போது முதல் வீரராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டும் முதல் வீரராக மெகா ஏலத்திலும் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 8.25 கோடிக்கு வாங்கியது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை 5 கோடிக்கு தட்டி தூக்கியது. இவ்வாறாக வீரர்களை வாங்க பல அணிகளும் கடுமையாக போட்டி போட்டு உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் ஏலத்திற்கு வந்தார். இதன்பின் டெல்லி அணி இவரை வாங்க முதலில் ஆர்வம் காட்டிய நிலையில் ,பின்  9 கோடி நெருங்கியதும் ஒதுங்கிக் கொண்டது. இதனை அடுத்து குஜராத் டைடன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொண்டன. ஆகமொத்தம் கடைசியில் 12.25 கோடிக்கு கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் ஐயரை  தட்டி தூக்கியது.

கொல்கத்தா அணி இந்த மெகா ஏலத்தில் பாட் கம்மின்ஸையும்  வாங்கினது மட்டுமில்லாமல், ஷ்ரேயஸ் ஐயரையும்  வாங்கி உள்ளதால் இந்த நிறுவனத்தை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஷ்ரேயஸ் ஐயர் இந்த அணியை  வழிநடத்துவார் என பலர் கூறி வந்த நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கருதப்படுகிறது.

Categories

Tech |