Categories
மாநில செய்திகள்

ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் திருவள்ளுவர் மாவட்டம் மப்பேட்டில் 1,200 கோடி ரூபாய் முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அரசு தனியார் பங்களிப்புடன் சென்னை கோவை உள்ளிட்ட 35 நகரங்களில் பல்முனைய சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகம் ஆகியவை ஒன்றிணைந்து அரசு,தனியார் பங்களிப்புடன் மப்பேட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் போன்றோர் காணொளி மூலமாக பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |