கோவில் அறங்காவலர் ஒருவர் 12 கோடி ரூபாயை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்ப முயற்சி செய்யும்போது போலிஸாக வேடமணிந்த கொள்ளையர்கள் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
மும்பையை சேர்ந்த கோவில் அறங்காவலர் ஒருவர் கனடாவில் இருக்கும் ஒருவருக்கு சட்டவிரோதமாக 12 கோடியை அனுப்ப முயற்சி செய்துள்ளார். பணத்தை கையில் கொண்டு செல்லும் தொழிலை செய்யும் இருவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர்கள் 2 பேரும் கனடாவிற்கு பணத்தை கொண்டு செல்வதற்காக மேலும் 6 பேரை கூட்டாளியாக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த ஆறு பேரையும் வேறொரு 6 நபர்கள் போலீஸ் வேடமணிந்து அவர்களிடம் பணத்தை பறித்துள்ளனர்.
அப்போது தான் தெரிய வந்தது அந்த பன்னிரண்டு பேரும் இந்த 12 கோடியை ஆளுக்கு ஒரு கோடியாக பங்கிட்டு போயிருக்கிறார்கள். இப்போது வேறு வழியில்லாமல் முதலில் பணத்தை கோவில் அறங்காவலர் கொடுத்த அந்த இரண்டு பேர் உண்மையான போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். உடனே அந்த 12 பேரையும் போலீசார் கைது செய்த நிலையில் தற்போது வருமான வரித்துறையிடம் இந்த வழக்கு சென்றுள்ளது.