இந்தியாவில் கையிருப்பை விட 5 மடங்கு அதிகமாக இருக்கும் 2 தங்க சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.
தங்கமானது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு நாடும் தங்கத்தை கை இருப்பாக சேர்த்து வைத்து பொருளாதார ரீதியில் வளர்ச்சின் காரணியை தீர்மானிக்கின்றது.இந்தியாவும் தற்போதைய நிலையில் 626 டன் அளவு தங்கத்தை கையிறுப்பாக வைத்துள்ளது. ஆனால் இதை விட 5 மடங்கு தங்கம் கிடைக்கும் கிடைக்கும் சுரங்கம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சுரங்கம் தொடர்பான பல சோதனைகளை இந்திய புவியியல் ஆய்வு மையம் நடத்தி வருகின்றது. தங்கம் , கனிமம் உள்ளிட்டவை இருக்கும் இடங்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டதன் பலனாக தற்போது 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்களை கொண்ட இரண்டு சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது. இது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் அமைந்துள்ளது.
சோன்பத்ராவில் உள்ள சோன்பஹாடி பகுதி சுரங்கத்தில் 2943 டன் அளவுள்ள தங்க படிமமும் , ஹார்டி பகுதி சுரங்கத்தில் 646 டன் தங்க படிமங்களும் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள சுரங்க அதிகாரிகள் இவற்றின் மதிப்பு ரூ 12 லட்சம் கோடி என்று வரையறுத்துள்ளார். மேலும் இந்த சுரங்கங்களை இ-டெண்டரிங் மூலம் ஏலம் விடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.