Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரூ.13 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க பிரமுகர்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூரம்பட்டிவலசு அணைக்கட்டு ரோடு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா(48). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் சதீஷ்குமார் பி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தான். கடந்த 2017-ஆம் ஆண்டு ஈரோட்டை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் மின்சார வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்தார்.

அதனை நம்பி அவர் கேட்ட 13 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தேன். இதுவரை அவர் அரசு வேலை வாங்கி தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி கொடுக்கும்படி பலமுறை கேட்டும் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |