Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.14,000,00,00,000… செலவு செஞ்சி இருக்கு… விசிக கோரிக்கையால் சிக்க போகும் அதிமுக ?

செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது என்பது சில மாநிலங்களில் மாநில அரசின் உரிமையாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர் அந்த உரிமையை தக்க வைத்திருக்கின்ற சூழல் இருக்கின்றது. இந்த உரிமையை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் பாஜக தன்னுடைய அரசியலை உயர்கல்வி நிறுவனங்களில் திணிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே துணைவேந்தர் பணி நியமனங்களையும், சுதந்தரமாக்க மாநில அரசே தீர்மானிக்கக்கூடிய ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட வேண்டும் என்ற விவாதம் சட்டப்பேரவையிலே முன்னெடுக்கப்பட்டது.எதிர்வருகின்ற நிதிநிலை கூட்டத்தொடரில் அத்தகைய மசோதா கொண்டுவரப்படும் என்கின்ற உறுதியை மாண்புமிகு உயர் கல்வி துறை அமைச்சர் அவர்கள் வெளிபடுத்தியிருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல்வேறு சீர்கேடுகள் குறித்து, பல்வேறு விதமான விசாரணைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிக குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம், அது கூட்டுறவுத் துறையில் நடந்த முறைகேடாக இருந்தாலும் சரி அல்லது நிலக்கரி கொண்டு வந்து சேர்க்கிற தளத்தில் நடந்த முறைகேடாக இருந்தாலும் சரி, பல முறைகேடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அதுபோன்று பட்டியல் வகுப்பாருக்கும், பழங்குடியினருக்கு ஆண்டொன்றுக்கு ஒடுக்கப்படுகின்ற 14 ஆயிரம் கோடி நிதி எவ்வாறு கடந்த 10ஆண்டுகளில் செலவிடப்பட்டது என்பது குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்கின்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே வெளியிட்டு இருக்கிறோம் என தெரிவித்தனர்.

Categories

Tech |