வக்ஃப் சட்டம் 1995 பிரிவு 54 மற்றும் பொது வளாகங்கள் சட்டம், 1995 போன்றவற்றின் கீழ் வக்ஃப் சொத்துக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்போது 14 லட்சம் சதுர அடியிலான ரூபாய் 15,800 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தனி நபர்கள் வக்ஃப் வாரியத்திடம் தடை இல்லா சான்றிதழ் தராமல் சொத்துக்களை சட்டவிரோதமாக விற்பனை மற்றும் பரிவர்த்தனை செய்வதை தடுத்திட தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தால் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுச் சட்டம், 1908 பிரிவின் 22ன் படி ஆட்சேபனை கடிதங்கள் வழங்கப்பட்டு வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.