நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில தனியார் தடுப்பூசி மையங்களில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கான சர்வீஸ் கட்டணமாக அதிகபட்சமாக 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் (தடுப்பூசி மருந்திற்கு ஆகும் கட்டணம் தனி. அது இந்த 150 ரூபாய்க்குள் வராது) என தமிழக பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 18-59வயதுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகள் அல்லது மையங்களில் (இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்கள்) செலுத்திக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
Categories